மார்ச், 2008 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்
நெருங்க முடியா உயரத்தில் தங்கம் !
குழந்தைகளைக் கூட இனிமேல் “என் தங்கம்” என்று கொஞ்ச முடியாது போலிருக்கிறது!
தங்கத்தின் விலை சாமானிய மனிதன் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது.
கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 40 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்து விட்டது. நீங்களே பாருங்களேன்…

செப்டம்பர் 2007 இல் 700 டாலராக இருந்த தங்கத்தின் விலை ஆறே மாதங்களில் 1000 டாலரைத் தொட்டு விட்டது.
கடந்த 5 வருடங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கீழே காண்க:

என்ன கொடுமை சரவணன் !
யு.எஸ் டாலர் மேலும் சரியும் அபாயம்?
கடந்த வருடம் மலேசியா தனது ரிங்கிட்டை டாலருக்கு எதிராக மறுநிர்ணயம் செய்தது. தொடர்ந்து பல வருடங்களாக ஒரு டாலர் = 3.8 ரிங்கிட் என்ற ஒரே (fixed rate or pegged) நிலையில் இருந்தது. ஆனால் இப்போதோ ஒரு டாலர் = 3.2460 ரிங்கிட்.
பார்க்க: செய்தி
இப்பொழுது ஐக்கிய அரபு எமிரட்டேசும் இவ்வழியை பின்பற்றி, டாலருக்கு எதிராக ஒரே நிலையில் இருந்த தனது நாணயத்தின் மதிப்பை மறுநிர்ணயம் செய்ய பரிசீலித்து வருகிறதாம்.
பார்க்க: செய்தி
குவைத் ஏற்கனவே இம்முடிவை எடுத்து அதை அமுல்படுத்தி விட்டதாம்.
இதனால் மேலும் டாலரின் மதிப்பு சரியும் என பெரிதும் அஞ்சப்படுகிறது.
இவை எல்லாம் போதாதென்று பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் சங்கம் (OPEC), தங்களது பரிவர்த்தனைக்கு டாலர் அல்லாத மாற்று நாணயத்தை பரிசீலித்து வருகின்றனவாம்.
பார்க்க: செய்தி
ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்….!
அட நம்ம ஹாக்கி அணி வீரர்கள் (?) தான். மேலும் வாசிக்க »
Configuring your system to display tamil fonts properly
This blog shall be primarily a tamil blog, but this post is for those who cannot view tamil fonts properly in their browser, especially firefox. (At the time of writing this, Internet Explorer is not found to have any problem in rendering tamil fonts, to be precise, tamil “unicode” fonts.)
What is unicode?:
Here is how “wikipedia” defines it:
“Unicode is an industry standard allowing computers to consistently represent and manipulate text expressed in most of the world’s writing systems.”
- Ref: Wikipedia article
And the most commonly used character set to represent unicode characters is “UTF-8″.
மலேசிய தேர்தல் முடிவுகள்
மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் எதிர்பாரா திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன.
“மக்கள் சக்தி” என்பதே எங்கும் பேச்சாக இருந்தது. இந்தியர்களிடையே நிலவிய அதிருப்தியை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணி, 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்தது.
ஆளுங்கட்சிக் கூட்டணியில் இந்தியர்களின் பிரதிநிதியாக கருதப்பட்ட “ம.இ.கா” பலத்த தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் திரு.சாமிவேலு கூட இந்த எதிர்ப்பு அலையை எதிர்த்து நிற்க இயலவில்லை.
சென்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஆளுங்கட்சிக் கூட்டணி இம்முறை 137 இடங்களை மற்றுமே கைப்பற்ற முடிந்தது. எதிர்க்கட்சிகள் 82 இடங்களைக் கைப்பற்றின. மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகள் இவ்வளவு இடங்களைக் கைப்பற்றியது இதுவே முதன்முறையாகும்.
கடந்த வருடம் நடந்த இந்தியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி, ம.இ.கா தலைவர்கள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, தேர்தலுக்கு முன் முன்னால் பிரதமர் திரு.மகாதிர் அளித்த பரபரப்பு பேட்டி, இவை எல்லாம் இத்தேர்தலில் ஓர் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது என கருதப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு http://www.malaysiaindru.com/ என்னும் இணையதளத்தைக் காண்க.
வணக்கம்
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இப்பதிவின் மூலமாக என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும், நான் கற்றுக்கொண்ட காரியங்களைக் குறித்தும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கருத்துத் தெரிவிக்கவும்
கருத்துத் தெரிவிக்கவும்
மறுமொழிகள் (1)