எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்….!

இவர்கள் யாருன்னு தெரியுதா?ஹாக்கி அணி

அட நம்ம ஹாக்கி அணி வீரர்கள் (?) தான்.

ஆமா, எதுக்கு இவங்க இப்படி மண்டைய தொங்க போட்டுக்கிட்டு சோகமா இருக்காங்க? அது வேற ஒண்ணுமில்லீங்க, பசங்க ஒரு ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் தோத்துட்டாங்க.

அதனால என்ன? இது வழக்கமா நடக்குறதுதான?

உங்க கேள்வியில் உள்ள நியாயம் எனக்கு புரியதுங்க. ஆனா நம்ம பசங்க ஒரு முக்கியமான ஆட்டத்துல ஆப்பு வாங்கிட்டாங்க.
அடுத்து நடக்க போகிற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான அதிமுக்கியமான தகுதிச்சுற்று போட்டியில்தான் நம்ம ஆளுங்க “மண்ணை” கவ்விட்டாங்க. அதனால வருகிற ஒலிம்பிக் போட்டியில் நம்ம அணி “ஆப்சென்ட்”.

ஒரு காலத்தில் ஹாக்கி என்றாலே இந்தியா என்கிற நிலை இப்ப எப்படி மாறிவிட்டது பாத்தீங்களா? தொடர்ந்து 80 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று வந்த நமது ஹாக்கி அணி இப்படி தகுதிச்சுற்றிலேயே வெளியேறியதைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ஹாக்கி அணிக்கு ரொம்ப பொருந்தும்ங்க.

ஒரு வேளை நம்ம இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தோற்றிருந்தால் இப்படித்தான் “தலையை தொங்க” போட்டுக்கொண்டு வந்திருப்பார்களோ?

கஷ்டம்தான் போங்க!

1 comment so far

  1. kalyanakamala on

    சரியான தலைப்புக் கேத்த பதிவு!வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    கமலா


Leave a reply