யு.எஸ் டாலர் மேலும் சரியும் அபாயம்?

கடந்த வருடம் மலேசியா தனது ரிங்கிட்டை டாலருக்கு எதிராக மறுநிர்ணயம் செய்தது. தொடர்ந்து பல வருடங்களாக ஒரு டாலர் = 3.8 ரிங்கிட் என்ற ஒரே (fixed rate or pegged) நிலையில் இருந்தது. ஆனால் இப்போதோ ஒரு டாலர் = 3.2460 ரிங்கிட்.

பார்க்க: செய்தி

இப்பொழுது ஐக்கிய அரபு எமிரட்டேசும் இவ்வழியை பின்பற்றி, டாலருக்கு எதிராக ஒரே நிலையில் இருந்த தனது நாணயத்தின் மதிப்பை மறுநிர்ணயம் செய்ய பரிசீலித்து வருகிறதாம்.
பார்க்க: செய்தி

குவைத் ஏற்கனவே இம்முடிவை எடுத்து அதை அமுல்படுத்தி விட்டதாம்.

இதனால் மேலும் டாலரின் மதிப்பு சரியும் என பெரிதும் அஞ்சப்படுகிறது.

இவை எல்லாம் போதாதென்று  பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் சங்கம் (OPEC), தங்களது பரிவர்த்தனைக்கு டாலர் அல்லாத மாற்று நாணயத்தை பரிசீலித்து வருகின்றனவாம்.
பார்க்க: செய்தி

ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுவரை மறுமொழிகள் இல்லை

Leave a reply